கவிதை இதழ்

நண்பர்களுக்கு,

மலையாளம், ஹிந்தி, வங்காளம் போன்ற பிற மொழிகளில் உள்ளதை போல் தமிழில் கவிதைக்கென பிரத்யேக இணைய தளம் இல்லை. மறுபுறம் இணையத்தில், சமூக வலைதளத்தில் பொழிந்து குவியும் கவிதைகளால் கவிதை வாசிப்பே மட்டுப்படுகிறது. ஒரு வாசகன் இந்த குவியலுக்கு இடையே தரமானதை தேர்வு செய்ய தவித்துப் போகிறான். இச் சூழலில் ஒரு எழுத்தாளரின் அல்லது சக கவிதை வாசகனின் சிபாரிசு தேவையாகிறது. ஆகவே இந்த தளம்.

இதழ் ஒவ்வொரு மாதமும் 15 ஆம் தேதி வெளிவரும்.இதில் வெளியாகும் கவிதைகள் 1.1.2020 தேதிக்கு பின் பிரசுரம் கண்டவை சில பிரசுரம் ஆகாதவையும் கூட. சிற்சில விதிவிலக்குகள் இருக்கலாம். இதில் கவிஞர் மதார், கவிஞர் ஆனந்த குமார் மற்றும் எழுத்தாளர் ஜி.எஸ்.எஸ்.வி.நவின் ஆகியோர் தெரிவாளர்கள். இவர்களுக்கு உதவ கிருஷ்ணன், அழகிய மணவாளன், டி. பாரி ஆகிய மூவர் உள்ளனர். 

மேலும் இது ஒரு கூட்டு இணையதளமாக இருப்பதே எங்கள் விருப்பம். எனவே நண்பர்கள் அனைவரும் இதில் பங்கு பெற விரும்புகிறோம். இதற்கு அனுப்பப்படும் கவிதைகள் பற்றி அதன் ஆசிரியர் அல்லாத ஒருவரின் சிபாரிசு சில வரிகளில் இருக்க வேண்டும். அவை அடுத்த இதழில் பிரசுரிக்க கருத்தில் கொள்ளப்படும். இப்போதைக்கு பின்னூட்டம் தவிர்க்கப் படுகிறது, வாசகர்கள் விமர்சனத்தை அல்லது வாசிப்பை மின்னஞ்சல் செய்யலாம். மின்னஞ்சல் முகவரி: kavithaigaltamil2021@gmail.com

இனி வரும் இதழில் மொத்தம் 10 கவிதைகள் இடம்பெறும், அதிகபட்சம் 5 கவிஞர்களின் கவிதைகள் இடம்பெறும். 

நன்றி,

ஆசிரியர் குழு.

Share:

விக்ரமாதித்தன் கவிதை

இவ்வாண்டு (2021) விஷ்ணுபுரம் விருது பெறும் விக்கி அண்ணாச்சிக்கு வாழ்த்துக்கள். 

கவிஞர் விக்ரமாதித்யன் விக்கி பக்கம் 

***

ஆண் பெண் ஆடல் என்பது என்றும் நிறைவடையாதது. எப்போதும் சொல்லித் தீராதது. அந்த ஆடலுக்கு சுந்தரனும், மீனாட்சியும் விதிவிலக்கல்ல. சொக்கன் தன் திருவிளையாடலை என்றும் எவரிடமும் ஆடிய வண்ணமே நிற்கிறான். ஆடிக் கொண்டே முயலகனை காலின் கீழ் வைத்துள்ளான். கண்டத்தை கழுத்தின் நுனியில்.

எல்லாம் ஆடவல்லானின் ஆடவல்லமை எனத் தோன்றும் கணம் கவிஞன் அதனை ஆட்டி வைக்கும் ஆடவல்லமையை கண்டடைகிறான் அதன்பின் அவன் வாழ்வில் துன்பமில்லை, துயரமில்லை, இன்பநிலை வெகுதூரமில்லை.

நீ எங்கு வேண்டுமானாலும் ஆடு, என்ன வேண்டுமானாலும் ஆடு உன் திருவிளையாடலுக்கு நான் என்றும் பயந்து நின்றதில்லை. என்னை காக்கும் ஆதி தேவி என்னுடன் இருக்கிறாள் என விக்ரமாதித்தனின் இந்த கவிதை வரிகளை இரு ஆடவல்ல சக்தியை அறிந்த சித்தனின் வெளிச்சப்பாடு என்றே வாசிக்கத் தோன்றுகிறது.

- ஜி.எஸ்.எஸ்.வி.நவீன்

*** 

இனி ஒரு துன்பமில்லை

ஒரு சோகமில்லை

 

என்னை

இப்படியெல்லாம்

கஷ்டப்படுத்தாதே நண்பா

 

என்னை

கேள்வி

கேட்காதே சகோதரி

 

என்னை

எதிர்த்து

பேசாதே இவளே

 

காளிக்கு

இருக்கிறது

ஒரு தனிச் சுடலைக்காடு

 

நடராஜரை

நம்பியே

நாற்பது கோடி சில்வானத்துக்குக்

குடிபடைகள்

 

அவன் மார்பழகு

எவளுக்குச் சொந்தம்

 

சிவகாமிக்கு

சொந்தம்

 

போட்டி போட்டு

ஆடும் கறுத்த காளி அறிவாள்

 

அவன்

பாகீரதியை மறித்துச் சிரசில்

ஏந்திக் கொண்டவன்

 

சோமனின் சாபம் மாற்ற

சூடிக்கொண்ட சுந்தரன்

 

பிச்சைக்குப் போனாலும்

பூதகணங்களை இட்டுச் செல்லும்

பேரழகன்

 

அவனழகு

எவனுக்கு வரும்

 

இளமான்

அவன் விழிபார்த்துத் துள்ளுகிறது

 

உன் முகம்

எல்லாம் யாரால்

 

ஒரு சிவகாமி

பொறுதியில்

 

காளி

மேலேயேறி மிதித்தால் காலி நீ

 

உனக்கொரு

காடு

 

ஆட

ஐந்து சபை

 

உடன்

படுக்க ஒரு துடியான தேவி

 

பிறகு வந்து லோகபரிபாலனம்

பண்ணுவாயோ நீ

 

ஆனாலும்

உன்னை எதிர்பார்த்துத்தானே

ஒரு கன்னிக்குமரி

 

அவள்

அக்காள் மேற்கே

 

ஆடு

தன்னை மறந்து

 

நிருத்தியம் செய்

நேரம் காலமில்லாது

 

காலில்

போட்டு மிதி முயல்களை

 

கண்டம்

கறுத்தவனே

 

காரைக்கால் அம்மைக்கு நல்ல

கதி தந்தவனே

 

ஆடு

ஆடுவதுதானே உனக்கு அழகு

 

ஆடினாலும்

அரசனல்லவோ நீ

 

ஆட்ட வகை

அத்தனையும் தேறியவனல்லவோ

நீ

 

ஆடு அண்டபகிரண்டம் குலுங்க

ஆடு

 

கரும்பைக் கையில்வைத்து

காப்பாற்றிவிடுவாளாம் அவள்

 

இவளுக்குக் கட்டுப்பட்டு

ஏனிருக்கிறாய் மதுரையில்

 

தரையில்

கால்பதித்து நடந்ததுண்டா நீ

 

சிவகாமி மனசு தெரிந்திருந்தால்

காளி எங்கே வருவாள்

 

வந்தவளையும்

வாழவைத்தவனில்லை நீ

 

கூட இருந்தவளையும்

கொண்டாடாதவன் நீ தெரியுமா

 

பெண்ணருமை தெரியாத

உன்னைச் சிவனென்று

மனம் ஒப்பிக் கும்பிடுகிறதே ஜனம்.

 

என்னை மாதிரி கலைஞர்கள்

என்றென்றைக்கும் சக்தி பக்கம்

தான்.

 

குழல்வாய் மொழி அம்மனின்

குரலினிமை தெரியுமா உனக்கு

 

உலகம்மையின்

ஒரு பெரும்பரிவு உணர்வாயா நீ

 

காந்திமதியின் கண்பார்வை

கண்டு மனம்கொண்டதுண்டா நீ

 

உலகுயிர்க்கெல்லாம்

என்றும் காமாட்சித்தாய்தான்

 

நீ

சபையில் ஆடிக்கொண்டிரு

 

சலிப்பு தட்டினால்

சுடலையில் போய் ஆடு

 

எங்களுக்கு

எங்கள் தாய் ஆதிசக்தி இருக்கிறாள்.

 

அன்ன பூரணி இருக்கிறாள்.

 

அகமும் புறமுமான

அன்னை மீனாட்சி இருக்கிறாள்.

 

சாந்த

ஸ்வரூபிணி சிவகாமித்தாய் இருக்கிறாள்.

துடியான காளியும்

துணையாயிருப்பாள்.

 

இன்னும் என்ன வேண்டும்

 

”இனி ஒரு துன்பமில்லை

ஒரு சோகமில்லை

வரும் இன்பநிலை  

வெகுதூரமில்லை.”

                                                                                                                                 - விக்ரமாதித்தன்
(சேகர் சைக்கிள் ஷாப் தொகுப்பிலிருந்து)

***


Share:

தேவதேவன் கவிதை

நாம் எப்போதும் காலம், நேரம், இடம் மூன்றையும் ஒரு சட்டகத்துள் பொருத்திப் பார்க்க முயல்கிறோம். நாம் வாழும் இடத்தை ஒரு ஒழுங்குக்குள் அமைக்க முயல்கிறோம். ஆனால் இவை மூன்றும் உணர்வு நிலைகளில் அச்சட்டகத்துக்குள் அமையாத ஒன்று என்பதை கவனிக்க தவறிவிடுகிறோம்.

ஜெயமோகனின் நீலம் நாவலில் ஒரு படிமம் வரும், “வேனல் எழுந்த வெம்மை பரவி கருகி நின்றது காடு. கிளை பட்டு நின்றது பெருமரம். அதன்மேல் மொட்டு மொட்டு என்று கொத்திக்கொண்டிருந்தது பூந்தலை மரம்கொத்தி. கொத்திக் கொத்தி அது அமைப்பது நானிருக்கும் காலம். நத்தை ஊரும் வழியாக நீண்டுசெல்வதோ நீ அமைந்த காலம். ஊர்ந்து ஊர்ந்து நத்தை உணரும் ஒருகாலம். அசைந்து அசைந்து நத்தைக் கொம்புணரும் காலம். நத்தை உடலுணரும் காலம். நத்தை அகமுணரும் காலம். காலில்லா உடலுக்குள் எழுந்த பெரும்புரவி”.

நத்தையின் அகத்துள் அமைந்த பெரும்புரவி என்கின்ற படிமத்திற்கு இணையானது கீழுள்ள தேவதேவனின் கவிதை. ஒரு ஆறுக்கு ஆறு அறையில் எப்படி இருளும், ஒலியும் ஒரு சேர முயங்க முடியும். ஒருவன் எப்படி தன் வீட்டு அறையின் மறுமுனையில் அமெரிக்காவை பொருத்தி காண முடியும் என்றால் அது கவிஞனின் வாழ்வில் மட்டுமே சாத்தியம். கண்ணிமைக்கும் நொடியில் அங்கிருந்து இங்கு ஒரு பார்வை தீண்டிச் செல்கிறது. அந்த பார்வையின் தீண்டல் நம் சட்டகங்களை நமக்கு உடைத்துக் காட்டுகிறது.

- ஜி.எஸ்.எஸ்.வி.நவின்

***

அவன் தன் அமெரிக்க நண்பர்களுக்கு

ஆர்வத்துடன் பிதற்றும் கவிதை இது:

 

எல்லாம் எத்துனை சுலபமாகவும்

வேடிக்கையாவும் விளையாட்டாகவும்

இருக்கின்றன !

 

ஆறுக்கு ஆறு அடியுள்ள இரட்டைக் கட்டிலில்

குறுக்கே ஒரு திரை.

பத்தடி தூரத்தில்

எதிர் எதிரே உரையாடிக் கொண்டிருக்கும்

இரண்டு சன்னல்களையும் பற்றி

இணைத்தபடி நீண்ட கொடிக்கம்பியில்

நன்றாய்த் தொங்கும் அது.

 

இந்தப் பக்கம்,

அவன் வாசிப்புக்கும், கவிதையாக்கலுக்குமான

மின்விளக்கின் பேரொளி

 

அந்த பக்கம்,

அவன் துணைவியார் நல்லுறக்கத்துக்குகந்த

நயமான இருள்.

 

உறக்கமற்ற இரவில் அவன் துணைவியார்

உடல் அலுங்காமல் திரைவிலக்கி

எட்டிப் பார்த்துக் கொள்கிறாள்…

- தேவதேவன்

***

க் கவிஞர் தேவதேவன் விக்கி பக்கம்

 

Share:

லட்சுமி மணிவண்ணன் கவிதை

தந்தை கொலை என்பது உலக இலக்கியத்திலேயே குறியீட்டு ரீதியாக முக்கியமானது. தஸ்தோவ்ஸ்கியின்கரம்சோவ் சகோதரர்கள்நாவல் இதனையே கேள்வி எழுப்புகிறது. ஒரு இளைஞன் முதலில் தன் கட்டை உடைத்து வெளி வருவது தந்தை கொலை வழியாக தான்.

ஆனால் அந்த மூர்க்கம் தளர்ந்து தளர்ந்து சாய தொடங்கும். தந்தைக்கு எதிரான நிமிர் ஒரு கட்டத்தில் பணிய தொடங்கும். உலக இலக்கியத்தில் இத்தனை பேசப்பட்ட பின்பும் இந்த மறுபாதி பேசப்படாமல் இருக்கிறது என்றே தோன்றுகிறது.

அது ஒரு கனிந்த மனநிலையில் ஏற்படும் தரிசனம். உலகத்தை மாற்றியமைக்க ஓடிக் கொண்டிருக்கும் இளைஞனின் கண்களுக்கு அவை ஒரு பொருட்டல்ல. அந்த ஓட்டம் ஓய்ந்து அடங்கும் போது நிமிர்ந்த விட்டம் கொஞ்சம் கொஞ்சமாக சாய தொடங்கும்.

அப்படி ஒரு தரிசனத்தை கண்டடைந்தது லட்சுமி மணிவண்ணனின் கீழுள்ள கவிதை. அவர் கவிதையில் வெளிப்படும் இரண்டாம் கட்ட பாய்ச்சலின் ஒரு குறியீடு எனச் சொல்லலாம். அந்த மூர்க்கமாக வெட்டி சாய்ந்து வந்து இளைஞன் மெல்ல மறைந்து ஒரு தந்தையின் கனிவு புலப்படும் இடத்தில் நின்றுகொண்டு நிகழும் கவிதை இது.

- ஜி.எஸ்.எஸ்.வி.நவீன்

***

அப்பா

உன்னுடைய தோல் சுருங்கிய உருவம்

சதை வற்றிய வடிவம்

ஆற்றல் குறைந்த நீ

 

ஓங்கிக் கத்தாதே

சத்தமிடாமல் உற்றுப் பார்க்க வேண்டிய

ஒன்றிருக்கிறது

அதன்

இப்போதைய

தோற்றத்தில்

 

உன்னை தாங்கி நின்ற தூண்

சற்றே சாய்ந்து வருகிறது

எவ்வளவு சாய்கிறதோ

அவ்வளவுக்கு

உன்னையும் சேர்த்து இழுத்துக் கொண்டு

சாய்ந்து வருகிறது

எவ்வளவுக்கு சாய்கிறதோ

அவ்வளவுக்கு

உன் குழந்தை

நிமிர்ந்து

வருகிறது

தவழ்தலில் தொடங்கி

 

மாயக் கயிற்றின் விட்டம்

நிமிர நிமிர

சாய சாய


- லட்சுமி மணிவண்ணன்

***

லட்சுமி மணிவண்ணன் விக்கி பக்கம்

Share:

டி.அனில்குமார் கவிதைகள்

டி.அனில்குமார் சமகால மலையாள கவிதைகளின் முக்கியமான முகம். நெய்தல் நிலத்தின் வாழ்வைஅதனுள்ளிருக்கும் ஒருவன் வந்து எழுதும்போது மட்டுமே கிடைக்கும் கவித்துவ தருணங்களை இவரது கவிதைகள் மிகச்சரியாக பதிவு செய்கின்றன. இவரது முதல் கவிதைத் தொகுப்பு ‘அவியங்கோரா’ வெளியாகி முக்கியமான கவனத்தைப் பெற்றுள்ளது. 

இறப்பை அல்லது ஒரு பிரிவை குழந்தைகள் அந்த கணத்தில் உணர்வதில்லை.  அது அவர்கள் மனதில் மெல்ல தேங்கி பின் ஒலிக்கும். கு.அழகிரிசாமியின் ‘இருவர் கண்ட ஒரே கனவு’ கதையில் அதனை அத்தனை அழகாக சித்தரித்திருப்பார். 

’இருவர் கண்ட ஒரே கனவு’ கதை போல் டி.அனில்குமாரின் இந்த அவியங்கோரா கவிதையிலும் அந்த குழந்தைகளின் குழந்தைமை வெளிப்படுவதுடன் நின்றுவிடவில்லை. அதன் மேலதிகமாக வாழ்வின் குரூரம் வந்து அமர்கிறது. அந்த குரூரத்தின் எடையை கவிதை மொழி தாங்கி கனக்கிறது.

- ஆனந்த் குமார்

***

அவியங்கோரா

இறுதிச்சடங்கு முடிந்து

பூச்சியாக

ஆன்மா வீட்டிற்கு வந்தது

 

அப்பா.. அப்பா’ என

நாங்கள் ஒன்பதுபேரும்

கூவினோம்

 

எண்ணைப்பூசி

அப்போதுதான் படுத்திருந்த அம்மா

கொண்டையை வாரிச்சுருட்டி

தெறிக்கும் கடல்மொழியில்

நாலு கெட்டவார்த்தைச் சொன்னாள்

 

அப்பா அப்பா

ஓஞ்செறகு ஏன் இப்படியிருக்கு

கல்லறையில் எப்படிக் கெடந்துறங்குவ நீ

நாங்கள் ஒன்பதுபேரும்

முழந்தாளிட்டு கேட்டோம்

 

வலையை எடுங்க மக்களே

ஏறி நடங்க

அவியங்கோரா அள்ளிட்டு

திரும்பலாம்

 

பொழுது ஒளிகொள்ள

ஈரத்துணியுடன்

நாங்கள் பத்துபேரும்

திரும்பி வந்தோம்

 

அம்மா நன்றாக உறங்கிக்கொண்டிருந்தாள்

சீ ! எழுந்திருடீ

அப்பா கூச்சலிட்டார்

 

அவியங்கோரா வெந்த மணம்

மரவள்ளியுடன் உப்பும் மிளகும்

ஏப்பம்விட்டு அப்பா கிளம்பினார்

 

அப்பா அப்பா

எங்கே போற

இங்கேயே இருந்துக்கோ

நாங்க பத்து பேரும்

போயி படுத்துக்கிறோம்

கல்லறையில்

 

                                                                                                                                                        - டி.அனில்குமார்

* அவியங்கோரா – ஒரு சிறிய மீன்

***

தமிழ் இலக்கியத்தில் இன்று வரை குறிஞ்சி, மருத நிலம் பேசப்பட்டது போல் நெய்தல் நிலம் பேசப்பட்டதில்லை. நாவல்களில் ஜோ.டி.குரூஸ் செய்திருக்கிறது. கவிதையில் அவை பெரும்பாலும் பெயர் சுட்டும் ஒரு இடமாக மட்டுமே வந்துள்ளது. அதனை தாண்டி அந்நிலத்தோடு அனுக்கம் என்பது நம் எழுத்தில் மிகக் குறைவே. 

மலையாளத்தின் புதுமுக கவிஞரான டி. அனில் குமார் நெய்தல் நிலத்தில் வளர்ந்தவர். அவரது கவிதைகளை வெறும் அந்நிலத்தின் காட்சி படிமங்கள் என்றே சொல்லத் தோன்றுகிறது. அந்த காட்சியை விரித்து வாழ்வின் கவித்துவமான தருணத்தோடு முடிச்சிட்டு கவிதை புனைகிறார் டி.அனில் குமார்.

இந்த கவிதையில் பிள்ளைகள் விளையாடும் முற்றத்தில் படகில் வந்தமரும் அந்த ஆச்சி யார்? எங்கெங்கோ பயணித்து அந்த வீட்டின் முற்றத்தில் அமரும் மூக்குவத்தி எனச் சொல்லுமிடத்திலிருந்து கவிதை ஆரம்பமாகிறது.


- ஜி.எஸ்.எஸ்.வி.நவின்

***

படகு

 பிள்ளைகள் விளையாடும் முற்றத்தில்

வலை விரித்திருந்தாள் ஒரு ஆச்சி

இப்பதான் வந்தேன்

கரையேறியிருந்த படகைச் சுட்டி

அவள் சொன்னாள்

 

இதுபோன்ற படகு

850 வருடங்கள் பழமையானது

85 வயதுள்ள இந்த ஆச்சி

இதிலெப்போது போய்வந்தாள்

 

அப்போதுதான் தெரிந்தது

அவள் அந்தவீட்டை சேர்ந்தவளல்ல

அவள் ஒரு பயணி

அவள் புறப்பட்டு 850 வருடங்கள் ஆகிறது

அரபியாய்

பிரெஞ்சுக்காரியாய்

டச்சுக்காரியாய்

இப்போது இந்த குடிசைமுற்றத்தில்

ஒரு முக்குவத்தியாக

 

சிறிது நேரம் கழித்து

படகை தள்ளி போகிறாள்

85 வயதுள்ள

850 வருடங்கள் முன்பே புறப்பட்ட

ஒரு ஆச்சி

டி. அனில் குமார்

- தமிழில் மொழிபெயர்ப்பு ஆனந்த் குமார்

***

(‘அவியங்கோரா’ தொகுப்பிலிருந்து)

 அவியங்கோரா வாங்க

 

Share:
Powered by Blogger.

ஆகாய மிட்டாய் - கல்பற்றா நாராயணன் கவிதை

ஆகாய மிட்டாய் ந ண்பனின் மகளின் பெயர் மழை என்று தெரிந்தபோது மனம் தெளிந்தது சாறாம்மாவுக்கும் கேசவன்நாயர்க்கும் இருந்த துயரம் சற்று பிந்தியானால...

தேடு

Labels

அபி (11) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (4) இந்தி (5) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) எம். கோபாலகிருஷ்ணன் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (4) கட்டுரை (6) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (1) கல்பற்றா நாராயணன் (3) கல்பனா ஜெயகாந்த் (1) கவிதை (146) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) குன்வர் நாராயண் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (2) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (3) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (4) தேவதேவன் (18) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (2) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (1) பெருந்தேவி (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (3) மரபு கவிதை (7) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மொழிபெயர்ப்பு (10) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (2) வாசகர் (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (6) வே. நி. சூர்யா (2) வே.நி. சூர்யா (1) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (1) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Most Popular

Labels

அபி (11) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (4) இந்தி (5) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) எம். கோபாலகிருஷ்ணன் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (4) கட்டுரை (6) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (1) கல்பற்றா நாராயணன் (3) கல்பனா ஜெயகாந்த் (1) கவிதை (146) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) குன்வர் நாராயண் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (2) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (3) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (4) தேவதேவன் (18) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (2) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (1) பெருந்தேவி (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (3) மரபு கவிதை (7) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மொழிபெயர்ப்பு (10) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (2) வாசகர் (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (6) வே. நி. சூர்யா (2) வே.நி. சூர்யா (1) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (1) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Blog Archive